களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையை ஒரு பொது வைத்தியசாலை தரத்திற்கு உயர்த்துவதற்கு தேவையானவ வளங்களை பெற்றுதருவற்குரிய நடவடிக்கைகளை நான் முன்னெடப்பேன் என சுகாதார தபால் தொலைத் தொடர்பு வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ச அவர்கள் வாக்குறிதியளித்துள்ளார்.
களுவாங்சிகுடி தபாலக திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சரை நேரில் சந்தித்த களவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் இ.புவனேந்திரநாதன் அவர்கள் வைத்தியசாiலையின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி இவ் வைத்தியசாலையை மத்திய அமைச்சுக்குள் உள்வாங்க வேண்டும் எனும் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை அமைச்சரிடம் கையளித்திருந்தார்.
இம் மகஜரினை பெற்றுக் கொண்டு வாசித்து அறித்த அமைச்சர் பதிலளிக்கும் பேதே வைத்திய அத்தியட்சகரிடம் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த சந்திப்பின்போது இடம் பெற்ற உரையாடலின் போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்.
தற்போதைக்கு எந்தவொரு வைத்தியசாலையையும் மத்திய அமைச்சிக்குள் உள்வாங்கும் நோக்கம் எமது அரசாங்கத்திற்கு இல்லை. இருந்தும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை முக்கியமான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலையத்தில் இருப்பதனை நான் நன்கு அறிவேன். எனவே தேவையான மனிதவளம் பௌதீகவளங்களை கூட்டுவதனூடாக ஒரு பொது வைத்தியசாலை தரத்திற்கு கொண்டுவர முடியும் அவ்வாறு கொண்டு வருகின்றபோது மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையினை வழங்குகின்ற வைத்திசாலையாக இவ் வைத்தியசாலை மாற்றம் பெறும் என தெரிவித்த அமைச்சர் தற்போதைக்கு மிகவும் அவசராமாக தேவைப்படும் வளங்களை தெரிவிக்குமாறு வைத்திய அத்தியட்சகரிடம் கேட்டறிந்து அதனை குறிப்பெடுத்து கொண்டார்......பழுகாமம் நிருபர்
No comments