Column Left

Vettri

Breaking News

கல்முனை அஸ்ஹர் வித்தியாலயத்தில் விஞ்ஞானக் கண்காட்சி வெற்றிகரமாக நிறைவு!!




மாளிகைக்காடு செய்தியாளர் கல்முனை கமு/கமு/ அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் விஞ்ஞானக் கழகத்தின் ஏற்பாட்டில் இன்று (15) நடைபெற்ற "Science Expo – 2026" விஞ்ஞானக் கண்காட்சி மாணவர்களின் ஆக்கபூர்வமான அறிவியல் படைப்புகள் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளுடன் வெற்றிகரமாக நிறைவுற்றது. பாடசாலை பிரதி அதிபர் எம்.எச்.ஐ. இஸ்ஸத்தின் நெறிப்படுத்தலில் பாடசாலை அதிபர் திருமதி எஸ்.எம்.எஸ். ரிஸானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை கல்விப் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் யூ.எல். ரியால் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். மேலும் ஆசிரியர் ஆலோசகர் (விஞ்ஞானம்) ஏ.ஜி.எம். ஜூலூல், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆலோசகர் (விஞ்ஞானம்) எம்.எஸ்.எஸ். அமீன், அல் மீஸான் பௌண்டஷன் தவிசாளர் யூ.எல். நூருல் ஹுதா உமர், கல்முனை அல்- பஹ்ரியா மகா வித்தியாலய அதிபர் எம்.எஸ். பைசால், கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர். மஜீதியா ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களின் அறிவியல் ஆக்கங்களைப் பார்வையிட்டதுடன், அவர்களின் திறமைகளைப் பாராட்டினார். கண்காட்சியில் மாணவர்கள் உருவாக்கிய பல்வேறு விஞ்ஞான மாதிரிகள், பரிசோதனை விளக்கங்கள், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம், இயற்பியல், இரசாயனவியல் மற்றும் உயிரியல் தொடர்பான படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இவை வருகை தந்த பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அதிதிகள் பாராட்டைப் பெற்றன. மாணவர்களிடையே அறிவியல் சிந்தனை, ஆராய்ச்சி மனப்பாங்கு மற்றும் புதுமை திறனை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்தும் நடத்தப்படும் என பாடசாலை நிர்வாகம் தெரிவித்தது.

No comments

Subscribe Us