Column Left

Vettri

Breaking News

கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவர்கள் மாகாண மட்ட கராத்தே போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவு!!




(எம்.எஸ்.எம்.ஸாகிர்) திருகோணமலை Mc Heyzer உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற மாகாண மட்ட பாடசாலைக்கு இடையிலான "கராத்தே" சுற்றுப் போட்டியில் கல்முனை ஸாஹிரா பாடசாலை மாணவர்களான எம்.எப்.ஏ.வஸீம், ஆர்.எம். ரக்ஸான், எம்.கே.இபாட் அப்துல்லாஹ் ஆகியோர் Team kumite யில் 2nd Runner up ஆக வெற்றி பெற்று தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இப்போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களை வழிப்படுத்தி பயிற்றுவித்த ஆசிரியர் யூ.எல்.எம். இப்ராஹீம், ஏ.ஏ.ஹம்தான், ஏ.ஏ.ஹமீம் ஆகியோருக்கும், போட்டிக்கு மாணவர்களை அழைத்துச் சென்ற பொறுப்பாசிரியர்களான ஏ.வாரிஸ், ஏ.பி.நளீம் ஆகியோரையும் கல்லூரியின் முதல்வர் எம்.ஐ. ஜாபீ்ர் (SLEAS), இணைப்பாடவிதானத்திற்குப் பொறுப்பான பிரதி அதிபர் எஸ். முபாரக், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு (SDEC) மற்றும் பழைய மாணவர்கள் (OBA), பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

No comments