சம்மாந்துறை மஜ்லிஸ் ஆஷுரா சபையின் அமீர், ஐஏ. ஜப்பாருக்கு பாராட்டு..!!
( வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை மஜ்லிஸ் ஆஷுரா சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட விவசாய அபிவிருத்தி அதிகார சபையின் ஓய்வுபெற்ற மாகாண பணிப்பாளர் அல்ஹாஜ் ஐ.ஏ. ஜப்பார் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (15) சம்மாந்துறை மஸ்ஜிதுன் நஹர் பள்ளிவாசல் வளாகத்தில், நடைபெற்றது.
நிகழ்வுக்கு மஸ்ஜிதுன் நஹர் பள்ளிவாசல் தலைவரும், சம்மாந்துறை மத்தியஸ்தர் சபையின் தவிசாளருமான அல்ஹாஜ் மௌலவி எம்.வை. அஹமது ஜலீல் (JP) தலைமை தாங்கினார்.
அவர் தனது உரையில், அல்ஹாஜ் ஐ.ஏ. ஜப்பார் அவர்கள் மஹல்லாவின் தலைவராக செயற்பட்டவர் .இன்று மஜ்லிஸ் ஆஷுரா அமைப்பின் அமீராக தெரிவு செய்யப்பட்டிருப்பது சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் விடயமாகும் எனக் குறிப்பிட்டார்.
சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்து, ஒற்றுமையுடனும் பொறுப்புணர்வுடனும் இந்த நிர்வாகக் கட்டமைப்பை முன்னெடுத்துச் செல்ல அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் தலைமையுரையில் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் பிரதம நம்பிக்கையாளர் மௌலவி கே.எம்.கே.ஏ. ரம்ஷின் காரியப்பர், ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் மௌலவி எம்.எல்.எச். பஷீர் மதனி, ஓய்வுபெற்ற நிர்வாக கிராம உத்தியோகத்தரும் குவாஸி நீதிபதியுமான அல்ஹாஜ் எம்.எல். தாஸிம் (JP), மஸ்ஜிதுன் நஹர் இமாம் மௌலவி எம்.ஏ.எம். ஜாபீர், மஜ்லிஸ் ஆஷுரா பொதுச் செயலாளர் அல்ஹாஜ் ஏ.எம். இலியாஸ்(ஓய்வுபெற்ற நிர்வாக கிராம உத்தியோகத்தர்), மஜ்லிஸ் ஆஷுரா செயலாளர் அல்ஹாஜ் ஏ.சி.ஏ.எம். இஸ்மாயில் (ஓய்வுபெற்ற அதிபர்)உள்ளிட்ட பலர் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்டு வாழ்த்துரைத்தனர்.
No comments