Column Left

Vettri

Breaking News

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு!!




லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இன்று (03) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 4765 ரூபாயக காணப்பட்ட 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4465 ரூபாய் ஆகும். அதேபோல், 1910 ரூபாவாக நிலவிய 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 118 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1792 ரூபாவாகும். 890 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 55 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 835 ரூபாவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

No comments

Subscribe Us