Column Left

Vettri

Breaking News

அம்பாறையில் 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!!




பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் உகண புறநகர் பகுதியில் சுமார் 3050 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் பிரதான கடத்தல்காரர் இன்று காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேக நபர் வசம் இரந்து ஐஸ் போதைப்பொருள் போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 39000 ரூபா,ஒரு மின்னணு தராசு மற்றும் ஒரு கைபேசி இதர பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபரின் வீடு உகண பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. எனினும் அவர் மாலிகா தென்ன பகுதியில் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இந்த போதைப்பொருள் கடத்தலை நடத்தி வந்துள்ளார். கைது செய்யப்பட்டவர் ஒரு தீவிர போதைப்பொருள் அடிமை எனவும்இ இவருடைய தந்தை ஒரு ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக உகண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இச் சோதனை நடவடிக்கையில் அம்பாறை மாவட்டப் பொறுப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்ல மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி ஆகியோரின் வழிகாட்டலில் ஊழல் ஒழிப்புப் பிரிவினர் உள்ளிட்ட விசேட பொலிஸ் குழுவினர் முன்னெடுத்திருந்தனர். அத்துடன் உகண பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதம பொறுப்பதிகாரி சுமித் குணவர்தன தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

No comments

Subscribe Us