Column Left

Vettri

Breaking News

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகமானது நீதிமன்றின் கட்டளைக்கு அமைய பொதுச் சுகாதார பரிசோதர்களினால் சீல் வைந்து பூட்டப்பட்டுள்ளது!!




களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்கு உட்பட்ட உணவுகமே மேற்படி நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய பூட்டப்பட்டுள்ளது. 13.07.2026 திங்கள் கிழமை இரவு வேளையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் இணைந்து மேற்கொண்ட விசேட உணவு பாதுகாப்பு நடவடிக்கையின் போதே சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகமானது அடையாளப்படுத்தப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகரினால் 1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவு சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கானது 15.07.2026 திகதி புதன் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது இதனை விசாரித்து அறிந்த நீதிவான் இதன்போது உணவக உரிமையாளரை ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் குறித்த உணவகமானது சுகாதார குறைபாடுகள் அனைத்தும் சீர்செய்யப்படும் வரை பூட்டப்படும் என கெளரவ நீதவானால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. குறித்த கட்டளைக்கு அமைய சுகாதார பரிசோகர் குழுவினரால் குறித்த கடையானது சீல் வைத்து பூட்டடப்பட்டுள்ளது..... பழுகாமம் நிருபர்

No comments

Subscribe Us