பொருளாதார மீட்சியில் இலங்கை முன்னேற்றம் – உலக வங்கி புதிய தர அறிவிப்பு!!
உலக வங்கி புதன்கிழமை (1) வெளியிட்டுள்ள சமீபத்திய பொருளாதார வகைப்பாட்டின் அடிப்படையில், இலங்கை மீண்டும் உயர்-மத்திய வருமானம் பெறும் நாடு (Upper-Middle Income Economy) என்ற தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு நாடு எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால் இலங்கையின் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அதன் விளைவாக, நாட்டின் வருமானத் தரமும் குறைந்திருந்தது.
எனினும், அந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் பலனாக, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை மீண்டும் உயர்மத்திய வருமான நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
அத்துடன், 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 5 சதவீதம் என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், உற்பத்தித் துறை மற்றும் கைத்தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள மீட்சியும், நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
No comments