Column Left

Vettri

Breaking News

நீர்கொழும்பில் இருந்து இராணுவ பாதுகாப்புடன் மட்டு. சிறைக்கு அழைத்துவரப்பட்ட 60 கைதிகள்!!




நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இராணுவம் விசேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு 60 கைதிகள் நேற்று (07) மாலை 6.00 மணிக்கு அழைத்து வரப்பட்டு சிறைச்சாலை அத்தியட்சகர் இந்திக்க ரங்கண பெரேராவிடம் ஒப்படைத்துள்ளதுடன், பொலன்னறுவை சிறைச்சாலைக்கு 63 பேர் கொண்டுவரப்பட்டு ஒப்படைத்துள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்குள் இடம் பெற்ற மோதல் சம்பவத்தையடுத்து அங்கிருந்த 60 கைதிகளை இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டதையடுத்து சிறைச்சாலை பகுதியை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை 400 கைதிகள் பராமரிக்க கூடிய மட்டக்களப்பு சிறைச்சாலையில் 960 கைதிகள் பல இடநெருக்கடிகளுக்குள் இருந்து வரும் நிலையில் மேலும் நீர்கொழும்பு சிறையில் இருந்து 60 கைதிகள் கொண்டு வரப்பட்டதையடுத்து 1020 கைதிகள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. அதேவேளை பொலன்னறுவை சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்புடன் 63 கைதிகள் அழைத்துவரப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

No comments

Subscribe Us