Column Left

Vettri

Breaking News

அம்பாறையில் பொசோன் திருவிழா-5 பிரம்மாண்ட தோரணங்கள் மற்றும் பக்தி விளக்குக் கூடுகளுடன் கோலாகல ஏற்பாடுகள்




அம்பாறை நகரில் அமைக்கப்பட்டிருந்த பொசோன் வலயம் பாறுக் ஷிஹான் பொசோன் உதான விழாவையொட்டி, அம்பாறை நகரில் அமைக்கப்பட்டிருந்த பொசோன் வலயத்தின் ஐந்து தோரணங்கள் விளக்குகள் ஒளிர்விக்கப்பட்டு, பொதுமக்கள் அவற்றைக் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள்செவ்வாய்க்கிழமை(30) மாலை செய்யப்பட்டிருந்தன. அம்பாறை நகரின் பிரதான தோரணத்தை அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, இலங்கை இராணுவத்தின் 24-வது படைப்பிரிவின் (Division) தளபதி மேஜர் ஜெனரல் திலுப பண்டார, அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் இணைந்து திறந்து வைத்தனர். மகா சங்கத்தினரான, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிரதம சங்கநாயக்க கிரிந்திவெல சோமரத்ன தேரர், அமரபுர மகா நிகாயவின் பிரதம சங்க நாயக்க கிரிதலே குணானந்த தேரர், அம்பாறை - மட்டக்களப்பு இரு மாவட்டங்களின் பிரதம சங்க நாயக்கரும் ,கினியாகல உத்தர ஜயமஹ விகாரையின் விகாராதிபதியுமான இங்கினியாகல சிறிதம்ம தேரர் மற்றும் அம்பாறை நகர மகா விகாரையின் விகாராதிபதி சுஹுதகம சீலரத்ன தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் 'சேத் பிரித்' பாராயணம் செய்து ஆசி வழங்கினர். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பல்லின மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடும் ஒரு முக்கிய ஆன்மீக மற்றும் கலாசார நிகழ்வாக இந்த பொசோன் வலயத் தோரணக் கண்காட்சி அமைகிறது.இந்த ஆண்டு பொசோன் பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு, அம்பாறை பொசோன் வலயக் குழுவினர் அம்பாறை நகரில் 5 பிரம்மாண்டமான தோரணப் பந்தல்களை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

No comments