Column Left

Vettri

Breaking News

30 வருடங்களாக திறக்கப்படாமல் இருக்கும் புதிய வளத்தாப்பிட்டி சந்தை!!




( வி.ரி. சகாதேவராஜா) கடந்த 30 வருடங்களாக திறக்கப்படாமல் இருக்கும் புதிய வளத்தாப்பிட்டி சந்தையின் அவலம் பற்றி பலரும் விஷனம் தெரிவிக்கின்றார்கள். 1996 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் அஷ்ரப்பினால் மீள்குடியேற்ற புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தில் சந்தையும் கட்டப்பட்டது. ஆனால் கட்டப்பட்ட சந்தை இதுவரைக்கும் திறக்கப்படவில்லை . அங்கு ஒரு பொருளும் விற்கப்படவில்லை. சம்மாந்துறை பிரதேச சபைக்கு சொந்தமான இந்த சந்தையும் அந்த வளாகமும் கவனிப்பாரற்று கிடக்கிறது . சட்டவிரோத செயல்களிலே ஈடுபடுவதற்கு உகந்த இடமாகவும் மாறி வருகிறது . புதிய வளத்தாப்பிட்டியில் சம்மாந்துறை பிரதேச சபையின் உபதவிசாளர் மற்றும் உறுப்பினர் ஆகியோர் இருக்கத்தக்க வகையில் இன்னும் இந்த சந்தை இயங்காமல் இருப்பது கண்டு பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

No comments

Subscribe Us