Column Left

Vettri

Breaking News

மாளிகாவத்தையில் போதைப்பொருட்களுடன் 19 வயது இளைஞன் கைது!!




கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் வெவ்வேறு வகையான போதைப்பொருட்களுடன் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புத் தேடுதலின் போதே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 69 கிராம் குஷ் போதைப்பொருள், 18 கிராம் கொகெய்ன் மற்றும் 40 போதை மாத்திரைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பில் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்

No comments

Subscribe Us