Column Left

Vettri

Breaking News

வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த 17 வயது சிறுமி கல் குவாரியில் சடலமாக மீட்பு!!




மகவலதென்ன, கஜுவத்தை பகுதியிலுள்ள கல் குவாரி ஒன்றிலிருந்து 17 வயதுச் சிறுமி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பலாங்கொடை, மகவலதென்ன பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சிறுமி வியாழக்கிழமை (23) முதல் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த நிலையில், அது தொடர்பில் சிறுமியின் தந்தையினால் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவளிக்கப்பட்டிருந்தது. எனினும், இச்சம்பவம் கொலையா, தற்கொலையா அல்லது நீரில் மூழ்கி ஏற்பட்ட விபத்தா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று சனிக்கிழமை (25) பலாங்கொடை வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments

Subscribe Us