Column Left

Vettri

Breaking News

கல்முனை அஷ்ராஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு 04 புதிய பயிற்சி மருத்துவர்கள் நியமனம்!!




பாறுக் ஷிஹான் நாட்டின் பொதுச் சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கல்முனை அஷ்ராஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு பயிற்சி மருத்துவர்கள் இன்று சனிக்கிழமை தங்களது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர். கடமைகளைப் பொறுப்பேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வின் போதுஇ புதிய மருத்துவர்களுக்கான நியமனக் கடிதங்களை வைத்தியசாலையின் அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எல்.எம். றிபாஸ் வழங்கி வைத்தார். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பயிற்சி மருத்துவர்களுக்கான இரண்டு நாள் புத்தாக்குமுகப் பயிற்சி தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிகளைத் தொடர்ந்து அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவப் பிரிவுகளில் உத்தியோகபூர்வமாகப் பயிற்சிக் கடமைகளை முன்னெடுக்கவுள்ளனர். பொதுமக்களுக்குத் தரமான மற்றும் மனிதநேயமிக்க சுகாதாரச் சேவையை வழங்கும் நோக்கில், அஷ்ராஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மருத்துவக் குழுவில் இணைந்துள்ள புதிய மருத்துவர்களுக்கு வைத்தியசாலை நிர்வாகத்தினர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வில் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஏ.எல். பாறூக், முகாமைத்துவ தர வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம். ரயிஸ், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஐ.எம்..எஸ். இர்ஷாத், தாதிய பரிபாலகிகளான திருமதி ஜி. ஜெகதீஸ்வரி, திருமதி ஏ.ஜி.எப். ஹினாயா மற்றும் தலைமை மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் என்.எல்.எம். தொளபீக் உட்பட வைத்தியசாலையின் உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

No comments

Subscribe Us