Column Left

Vettri

Breaking News

மாமரச் செய்கை- சம்மாந்துறையில் விழிப்புணர்வு கருத்தரங்கு!!




வி.ரி. சகாதேவராஜா சம்மாந்துறை மேற்கு விவசாய போதனாசிரியர் பிரிவில் மா மரச் செய்கையில் ஒருங்கிணைந்த முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றுநேற்று முன்தினம் (23) நடைபெற்றது. கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் அம்பாரை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் பி. திஸா நாயக்கவின் வழிகாட்டலில் சம்மாந்துறை விவசாய போதனாசிரியர் எம்எச்.முர்ஷிதா ஷிரீன் தலைமையில் தொழில்நுட்ப உதவியாளர் ஆர்.ரஜிரேகா ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சம்மாந்துறை வலய உதவி விவசாய பணிப்பாளர் எஸ்.பரமேஸ்வரன், பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.கோகுல்ராஜ், என்.ஜெகதீஸ்வரன்,சக விவசாய போதனாசிரியர்களான பி. ராஜகருணா,வி.குணனீதராஜா, நிவேதிகா பிரதீப், விவசாய தொழில்நுட்ப உதவியாளர்களான, எஸ்எம்.பாத்திமா சில்மியா, வி.கஜானந்த்,பி.கருணா மற்றும் சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி விவசாய கற்கை மாணவ மாணவிகள், சம்மாந்துறை விவசாயிகள் என பலர் பங்கேற்றனர். இவ்விழிப்புணர்வு கருத்தரங்கில் மா மரச் செய்கையில் ஒருங்கிணைந்த முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்விற்காக மா மரச் செய்கையில் உள்ள முகாமைத்துவ நடவடிக்கைகளான நிலத் தெரிவு குழி அமைத்தல் பசளை இடல் களைக் கட்டுப்பாடுநீர்ப்பாசனம் கத்தரித்தலும் பராமரித்தலும்பெக்டோபியூட்டசோல் பாவனை மாங்காய்களுக்கு பொதியிடல் றொக்கிங் தெளிகருவி/ Rocking Sprayer பாவனை அறுவடை அறுவடைக்கு பின்னரான முகாமைத்துவம் களஞ்சியம் படுத்தல் என அனைத்து செயற்பாடுகளும் செயன்முறையுடன் கூடிய பயிற்சியாக இடம்பெற்றது.

No comments