Column Left

Vettri

Breaking News

நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு!!




பாறுக் ஷிஹான் நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் சடலம் நல்லடக்கத்திற்காக உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய வளத்தாப்பிட்டி பகுதியில் இச்சம்பவம் திங்கட்கிழமை(29) முற்பகல் வேளையில் இடம்பெற்றிருந்தது. இதன் போது வில்லுக் குளத்தில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி மரணமடைந்த முதியவரின் சடலம் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டதுடன் 63 வயது மதிக்கத்தக்க வளத்தாப்பிட்டி மல்வத்தை பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான ஐமா சந்திரராஜ் என அடையாளம் காணப்பட்டிருந்தார். மேலும் சம்மாந்துறை பதில் நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் - ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதுடன் குறித்த சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டிருந்தது. பின்னர் மீட்கப்பட்ட சடலத்தின் குறித்த சடலத்தின் மீதான மரண விசாரணை மற்றும் சசம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஆர்.ஆர்.வி.வி.ராஜகுரு பிரேத பரிசோதனை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் உடற்கூற்று பரிசோதனைக்கு பின்னர் நீரில் மூழ்கியதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு சடலம் உறவினர்களிடம் மாலை ஒப்படைக்கப்பட்டது. மேலும் சம்பத்தில் இறந்த முதியவரின் சடலத்தை குளத்தில் இருந்து நீண்ட போராட்டத்தின் பின்னர் அம்பாறை மாவட்ட உயிர் காப்பு மற்றும் அவசர மீட்பு குழுவினர் பொதுமக்களுடன் இணைந்து மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments