அம்பாறையில் 69 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினம் 36 வருடங்களின் பின்னர் முதன் முறையாக அனுஷ்ட்டிப்பு!
அம்பாறையில் 69 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினம் 36 வருடங்களின் பின்னர் முதன் முறையாக அனுஷ்ட்டிப்பு!
( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை நகரில் பட்டப்பகலில் 1990 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்த 69 அப்பாவித் தமிழ் மக்களின் நினைவாக அஞ்சலி நிகழ்வு ஒன்று நேற்று (12) வெள்ளிக்கிழமை மாலை புதிய வளத்தாப்பிட்டி நாவலர் சனசமூக நிலைய மண்டபத்தில் முதன் முறையாக உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
36 வருடங்களின் பின்னர் முதன் முறையாக புதிய வளத்தாப்பிட்டி முத்துமாரியம்மன் ஆலய ஏற்பாட்டில் அதன் தலைவரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான வெள்ளி ஜெயச்சந்திரனின் தலைமையில் நடைபெற்ற இந்த உறவுகளை நினைவுகூரும் இந்நிகழ்வில், குறிப்பாக 1990.06.12 அன்று கொல்லப்பட்ட 69 உறவுகளின் நினைவும் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அம்பாறை நகரில் 1990 ஜுன் 12 ஆம் திகதி பட்டப்பகலில் 69 தமிழர்கள் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டதையடுத்து காரைதீவு விபுலானந்த அகதி முகாமில் ஐந்து வருடங்கள் வாழ்ந்த எஞ்சியவர்கள் 1995 இல் புதிய வளத்தாப்பிட்டியில் மீள்குடியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
பின்னர் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உபதவிசாளர் வெ.வினோகாந்த் சமூக செயற்பாட்டாளர்களான எஸ். காத்தவராயன், முனியாண்டி , வெள்ளையன் , அழகிரி ஆகியோர் உரையாற்றிய துடன் மற்றும் பொதுமக்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் .
அன்றைய துயரச் சம்பவங்களில் உயிர்நீத்த அனைவரின் நினைவாக சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் இடம்பெற்றது
சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான வெள்ளி ஜெயச்சந்திரன் கூறுகையில்..
கடந்த 1990 ஆம் ஆண்டு நாட்டின் வடகிழக்கு பிரதேசங்களில் யுத்தம் மற்றும் தமிழ் மக்கள் மீதான பல்வேறு வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றது.
அதிலே முதன்முதலாக தாக்கப்பட்டது அம்பாறை நகரில் வாழ்ந்த தமிழ் மக்கள் நங்களாகும்.
இதன் போது எங்களது வீடு வாசல்கள் தீவைக்கப்பட்டு அளித்து நாசமாக்கப்பட்டவுடன் 69 பேர் வெட்டியும் சுட்டும் கடத்தியும் காணாமல் ஆக்கப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர்.
நாட்டில் நடந்த எல்லா சம்பவங்களும் ஏதோ ஒரு வகையில் நினைவு கூறப்படுகின்றன . உதாரணமாக
வீரமுனை படுகொலை
திராய்க்கேணி படுகொலை உடும்பன்குளபடுகொலை மைலந்தனை படுகொலையை சொல்லலாம்.
ஆனால் முதன் முதலாக வன்முறை தாக்குதலுக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகள் இதுவரை நினைவு கூறப்படவில்லை.
இச்சம்பவம் எங்கும் பதிவு செய்யப்படவில்லை.
அத்துடன் உயிரிழப்பை சந்தித்த இந்த 69 உறவுகளின் குடும்பங்களுக்கு முறையான நிவாரணங்கள் கொடுக்கப்படவில்லை
இழப்புபீடுகள் கிடைக்காதவர்கள் இன்னும் இருக்கிறார்கள்..
தற்பொழுது மீள்குடியேற்ற வீட்டுத் திட்டம் நமது பிரதேசங்களில் கணிசமாக வழங்கப்படுகிறது
இதில் ஒரு சில வீடுகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேட்கும்போது சொல்லப்படும் பதில்
உங்களுக்கு என்ன பிரச்சனை உங்களுக்கு எல்லாம் வழங்கப்பட்டு விட்டது
என்று எமது மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
உண்மையிலேயே தனது மகனை இழந்த
கணவனை இழந்த
குடும்பங்கள் வாழ வழி இன்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம் எங்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை என்று கூறுவது தான்.
எனவே இனியாவது இறந்த உயிர்களை நினைவு கூர வேண்டும்
நாங்களும் பாதிக்கப்பட்டு வாழ வழி என்று தவித்துக் கொண்டு இருப்பவர்கள் என்பதை நினைவுபடுத்த வேண்டும் என்றார்.
1990.06.12 ம் திகதி
கொல்லப்பட்டவர்கள்
பெயர் விபரம்
(இது புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தில் அவரது உறவுகள் இருக்கின்ற வீதிகள்)
கண்ணகி வீதி
01 அம்மாசி வேலு
02 வையாபுரி காளிமுத்து
03 முணியான்டி முத்துக்குமார்
04 முணியான்டி சுப்பிரமணியம்
05 மாயன் ராமலிங்கம்
06 வெள்ளையன் சந்திரா
07 கருப்பன் மீனா
08 ;மாயன் கல்யாணி
09 வெள்ளி மதிவதணன்
10 ;வெள்ளி எழிழகன்
11 கருப்பன் வெள்ளையன்
12 கருப்பன் சிகப்பி
13 வெள்ளையன் சாந்தி
14 கருப்பன் கமலாதேவி
15 இராமலிங்கம் முத்துமாரி
16 இராமலிங்கம் லிங்கேஸ்வரி
17 அரசன் கருப்பி
18 நாகன் வெள்ளி
19 வெள்ளி பாரதச்செல்வி
20 வெள்ளி ஜென்சிராணி
21 உடையான் கலைராஜா
22 பூச்சன் ஆறுமுகம்
23 பூச்சன் இருளன்
24 கருப்பன் வீரன்
அம்மன் வீதி
01 முணியான்டி வடிவானந்தன்
02 முணியாண்டி பரமேஸ்வரன்
03 அம்மாசி வீரபாண்டியன்
04 நமசிவாயம் நேசராசா
05 கோப்பிளி சின்னமாது
06 அழகைய்யா மலைராணி
07 இருளன் கதிரவேல்
08 வேலாண்டி தெய்வேந்திரன்
09 ஆறுமுகம் வீரன்
மத்திய வீதி
01 அழகிரி சிவனேசன்
02 முணியன் சுந்தர்ராஜ்
03 சுpத்திரவேல் சன்முகலிங்கம்
04 காளி முருகன்
05 கோணாமலை முகுந்தன்
06 நாகன் பெரியான்
07 பெரியான் நாகஜோதி
08 முணியான்டி அருள்மணி
09 அம்மாசி குலசேகரன்
10 அம்மாசி வடிவேல்
11 சோனை கணேசன்
12 கூலையன் இரத்தினம்
13 கருப்பயை;யா அற்புதமலர்
14 கருப்பைய்யா ஜோதிமலர்
15 கருப்பயை;ய சித்திரவேல்
16 கதிரவேல் விஜயகுமார்
விபுலானந்தா வீதி
01 பிச்சை நாகன்
02 சோனை கணேசன்
03 சோனை கணேசன்
04 ராமன் மல்லிகா
05 கணேசன் சுபாசினி
06 கணேசன் சுதாகரன்
07 கணேசன் சதிஸ்வரன்
08 கணேசன் நிசாந்தினி
09 ராமன் ரவி
10 இலட்சுமணன் தங்கராஜா
11 வேடன் நாகம்மா
12 முருகேசு மனோகரன்
13 கூலையன் இருளன்
14 செட்டி பஞ்சவர்ணம்
15 இருளன் விஜயன்
நாகதம்பிரான் வீதி
01 சாத்தன் நாகமுத்து
02 வேலுப்பிள்ளை வடிவேல்
03 கந்தைய்யா சுவேந்திரராஜா
04 சந்தவலியான் வையாபுரி
05 செல்லத்தம்பி ராஜாராம்
No comments