Column Left

Vettri

Breaking News

காரைதீவு ஜொலி கிங்ஸ் கழகத்தின் 19வது ஆண்டு நிறைவு: அமரர் மோகன் கணேஷ் நினைவாக மென்பந்து சுற்றுப்போட்டித் தொடர் கோலாகலத் தொடக்கம்!




 காரைதீவு ஜொலி கிங்ஸ் கழகத்தின் 19வது ஆண்டு நிறைவு: அமரர் மோகன் கணேஷ் நினைவாக மென்பந்து சுற்றுப்போட்டித் தொடர் கோலாகலத் தொடக்கம்!

காரைதீவு ஜொலிகிங்ஸ் கழகத்தின் 19வது ஆண்டு நிறைவைமுன்னிட்டு,ஜொலிகிங்ஸ் விளையாட்டுக்கழகத்தால் அமரர் மோகன் கணேஷ் அவர்களின் ஞாபகார்த்தமாக நடத்தப்படுகின்ற மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டித் தொடர், இன்றைய தினம் சனிக்கிழமை, ஜூன் 13, 2026, காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கிவைக்கப்பட்டது.

இச்சுற்றுப்போட்டித் தொடரில், உள்ளூர் மற்றும் வெளியூர் அணிகள் என மொத்தம் 32 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி, வெற்றிக்காகக் கடுமையாகப் போராடி வருகின்றன.

இந்த மாபெரும் விளையாட்டுத் திருவிழா சிறப்பாக நடைபெற அவரது குடும்பத்தின் அனுசரணை கிடைத்துள்ளது.

இத்தொடக்க விழாவிற்கு அதிதிகளாக திரு.S.விவேகானந்தராசா (ஓய்வு நிலை பிரதி திட்டமிடல் பணிப்பாளர்) M.வரதராசன் (புள்ளி விபர உத்தியோகத்தர்)ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இச்சுற்றுப்போட்டித் தொடரில் வெற்றி பெற்று சம்பியனாகும் அணிக்கும், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கும் பெறுமதி வாய்ந்த பணப் பரிசுகளும் வெற்றிக் கேடயங்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.

















No comments