சுப்பிரமணியனை உதைத்த சந்தேக நபரை 50 ஆயிரம் ரூபா சரீப்பிணை!!
( வி.ரி.சகாதேவராஜா)
கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற சுப்பிரமணியனை( நாய்) உதைத்த சந்தேக நபரை 50 ஆயிரம் ரூபா சரீப்பிணையில் செல்ல கல்முனை நீதிவான் நீதிமன்று இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை(27) கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற சுப்பிரமணியன் என்ற நாயை 21 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் உதைத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில் பல தரப்பினரின் கோரிக்கைக்கமைய மாலை கல்முனை தலைமையக பொலிஸார் சந்தேக நபரை கைது செய்திருந்தனர்.
இதன் போது இன்று ஞாயிற்றுக்கிழமை (28) மாலை கல்முனை நீதிவான் நீதிமன்றில் சந்தேக நபரை ஆஜர்படுத்திய போது சந்தேக நபரை 50 ஆயிரம் ரூபா சரீப்பிணையில் செல்ல அனுமதித்த நீதிவான் வழக்கினை மறுதவணைக்காக ஜூலை மாதம் 13 ஆந் திகதி வரை ஒத்தி வைத்தார்.
No comments