Column Left

Vettri

Breaking News

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை




 மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை


பாறுக் ஷிஹான்

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று  காலை  இடம்பெற்றது. 


மருதமுனை இஸ்லாமிய பிரசார மையத்தின் ஏற்பாட்டில்   நடத்திய இந்த ஹஜ்ஜுப் பெருநாள்  தொழுகை மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற குத்பா பிரசங்கம் என்பவற்றை  மருதமுனை தாறுல்ஹுதா மகளிர் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம்.எல்.எம்.முபாறக் மதனி நிகழ்த்தினார்கள்.

இதில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பெண்களுக்கு பிரத்தியோகமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

No comments