சாய்ந்தமருது பகுதியில் தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு
சாய்ந்தமருது பகுதியில் தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு
பாறுக் ஷிஹான்
கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஆசிக் தலைமையில், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பங்கேற்புடனும் நடைபெற்றது.
இதன் போது தண்டேயல் வீதி,பலாஹ் பள்ளி வீதி,தோணா ஈஸ்ட் (East) வீதி,போக்கடி குறுக்கு வீதி பின்வரும் வீதிகளுக்கான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மேலும், இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர்,கணக்காளர், பிரஜா சக்தி தவிசாளர்கள், உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மக்களின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள்இ பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கும் மக்கள் நலனுக்கும் பெரும் பங்களிப்பாக அமையும் என மக்கள் நன்றி தெரிவித்தனர்.
No comments