குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலையில் பொலிசார் சோதனை முன்னெடுப்பு
குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலையில் பொலிசார் சோதனை முன்னெடுப்பு
பாறுக் ஷிஹான்
வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.
அம்பாறை மாவட்டம் தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஹேன கிராமத்தில் உள்ள இன்று வீடொன்றில் குறித்த குளியலறையில் சட்டவிரோத சாராயம் உற்பத்தி நடைபெறுவதாக அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பிரியங்கரவுக்குக் ரகசியத் தகவல் கிடைத்திருந்தது.
குறித்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதுடன் 3,60,000 மில்லி லிட்டர் கோடா மற்றும் 30,000 மில்லி லிட்டர் கள்ளச்சாராயம் காய்ச்சும் உபகரணங்களுடன் சந்தேக நபரை கைது செய்தனர்.அத்துடன் கள்ளச்சாராய ஆலை சில காலமாக தமன மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மதுபானம் விநியோகித்து வந்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் குறித்த சோதனை நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட உபகரணங்களும் சந்தேக நபரும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக தமன பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கிழக்கு மாகாணப் பொறுப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் அறிவுறுத்தல்களின் பேரிலும் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் உத்தரவுகளின் பேரிலும் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி நேரடி மேற்பார்வையின் கீழும் அம்பாறை மாவட்டம் 1 உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்ன இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
No comments