ஆலையடிவேம்பில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வு.
ஆலையடிவேம்பில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வு.
இலங்கை தமிழரசுக் கட்சியின ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி நிகழ்வு இன்று (18) ஆலையடிவேம்பு ஸ்ரீ வம்மியடி ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்றது.
இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்காலில் தமிழர் எதிர்கொண்ட துயரங்களை நினைவு கூரும் வகையில் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுடன் உயிர்நீத்த உறவுகளுக்காக மே12 தொடக்கம் மே18 வரை வடக்கு கிழக்கு மாகாணங்கள் தோறும் உணர்வு பூர்வமாக அனுஷ் டிக்கப்பட்டு வருகிறது.
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி வேண்டி விசேட பிராத்தனைகளுடன் பொதுசுடர் ஏற்றப்பட்டு நினைவு கூறப்பட்டு பின்னர் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
குறித்த நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள்,ஆலையடிவேம்பு கிளை கட்சி நிருவாகிகள் ,தொண்டர்கள்,ஆதரவாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் அகதிகளாக இருந்த மக்கள் உணவின்றி தவித்தபோது உப்பு கஞ்சியை தயார் செய்து அருந்துவதற்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காத்திருந்த வேளை அரசின் செல் வீச்சிற்கு இலக்காகி பலர் உயிரிழந்தனர்.
அதனை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு வருடம் தோறும் நினைவு கூறப்பட்டு வருகிறது.
செல்வி வினாயகமூர்த்தி
No comments