Column Left

Vettri

Breaking News

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கௌரவிப்பு.




புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கௌரவிப்பு. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட ஹிஜ்ரா வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 2024,2025 ஆண்டில் சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (11 ) பாடசாலையின் அதிபர் ஏ.முகம்மட் இர்பான் தலைமையில் இடம்பெற்றிருந்தது. கடந்த இரு ஆண்டுகளில் வலயத்தில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகளால் நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாஷிட் யஹ்யா(ADS) அக்கரைப்பற்று பிரசேசெயலகம் , A.M.தமீம்(ADP) உதவி திட்டமிடல் பணிப்பாளர் ,கௌரவ அதிதிகளாக வைத்தியர் சித்திரா தேவராஜன்,பீ,பீ,சி,மிரர் ஊடகவியலாளர் எஸ்.எம் .ஹபீசா.ஆசிரியர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள்,பெற்றோர்,மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர். செல்வி வினாயக மூர்த்தி

No comments