Column Left

Vettri

Breaking News

இலங்கையில் 40 ஆண்டுகள் ஆன்மீக பணியாற்றிய சுவாமி ராஜேஸ்வரானந்த ஜி மகாராஜ்ற்கு பிரிவு உபசார விழா




இலங்கையில் 40 ஆண்டுகள் ஆன்மீக பணியாற்றிய சுவாமி ராஜேஸ்வரானந்த ஜி மகாராஜ்ஜிற்கு பிரிவு உபசார விழா ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை இராமகிருஷ்ண மிஷினில் கடந்த 40 வருடங்களாக கல்வி சமூக கலாச்சார ஆன்மீக பணியாற்றி வந்த மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ராஜேஸ்வரானந்தா ஜீ, ஓய்வுபெற்று இறுதி ஆன்மீக தவவாழ்வை மேற்கொள்ளுமுகமாக இந்தியா செல்லவுள்ளார். இலங்கையிலிருந்து பிரியாவிடை பெறவிருக்கின்ற இத்தருணத்தில், கொழும்பிலும், மட்டக்களப்பிலும், கொட்டகலையிலும் அவருக்கு மகத்தான பிரியாவிடை நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர், எதிர்வரும் வெள்ளிக்கிழமை 15 ஆம் தேதி மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷினுக்கு வருகை தர உள்ளார். அங்கு 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மகத்தான பிரியாவிடை நிகழ்வு மட்டக்களப்பு ஆச்சிரம பொதுமுகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் முன்னிலையில் நடைபெற உள்ளது. மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அந்நிறுவனத்தினனல் மகத்தான ஜீவசேவை புரிந்த மகராஜ்ஜின் பிரிவு உபசார விழா நடைபெறவுள்ளது. 1986 ஆம் ஆண்டு இராமகிருஷ்ண மிஷனின் இலங்கை கிளைக்கு மாற்றம் பெற்று வந்த சுவாமி ராஜேஸ்வரானந்தஜி மகாராஜ் அவர்கள், கடந்த 40 ஆண்டுகளாக கல்வி, ஆன்மிகம் மற்றும் சமூகப் பணிகளில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வந்துள்ளார். குறிப்பாக ஏழை மக்களின் முன்னேற்றம், இளைஞர் வழிகாட்டல் மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்காக tireless-ஆக பணியாற்றிய அவர், மக்களிடையே பெரும் மதிப்பையும் மரியாதையையும் பெற்றுள்ளார். இந்நிலையில், மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில் நீண்டகால சேவையை நிறைவு செய்துள்ள சுவாமி ராஜேஸ்வரானந்தஜி மகாராஜ் அவர்களுக்கு பிரிவு உபசார விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழா மே மாதம் 15 ஆம் திகதி மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்தில் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து மகாராஜ் அவர்களுக்கான பிரிவு உபசார (பிரியாவிடை) விழா 17 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து 18 ஆம் திகதி கொழும்பிற்குச் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சுவாமிகளின் அருளாசியை பெற்று நிகழ்வை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

No comments