Column Left

Vettri

Breaking News

அவுஸ்திரேலியாவில் பரிசுபெறும் 04 இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள்!




அவுஸ்திரேலியாவில் பரிசுபெறும் 04 இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள்! ( வி.ரி.சகாதேவராஜா) அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும், அஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களின் சிறந்த நான்கு நூல்களைத் தெரிவுசெய்துள்ளது. அவர்களின் பெயர் விபரங்கள் நேற்றிரவு வெளியிடப்பட்டன. நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதை, கட்டுரை ஆகிய நான்கு ஆக்க வகைகளில் இத்தெரிவு இடம்பெற்றுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் வெளியிடப்பட்ட நூல்களில் சங்கத்தின் பரிசளிப்புத் திட்டத்திற்குக் கிடைக்கப்பெற்ற நூல்களில் சிறந்த நூல்களாகத் தெரிவுசெய்யப்பட்டு, ஒவ்வொன்றும் ஐம்பதாயிரம் இலங்கை ரூபாவைப் பரிசாகப் பெறும் நூல்களையும், அவற்றை எழுதியவர்களையும் பற்றிய விபரங்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களில் பரிசுபெறும் நூல்களினதும், அவற்றை எழுதிய எழுத்தாளர்களினதும் பெயர் விபரங்கள் பின்வருமாறு: நாவல்: ஆத்ம அசைவுகள். நூலாசிரியர்: - திருமதி அற்புதராணி காசிலிங்கம் (மலரன்னை) திருநெல்வேலி, யாழ்ப்பாணம் சிறுகதைத்தொகுதி: முல்லைக் கோணேஸ் சிறுகதைகள் நூலாசிரியர்: நடராசா கோணேஸ்வரன் (முல்லைக் கோணேஸ்) புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு . கட்டுரை: நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள் நூலாசிரியர்: சஞ்சீவி சிவகுமார், நற்பிட்டிமுனை, கல்முனை. கவிதைத் தொகுப்பு : ஹுருலீன்கள் நூலாசிரியர் - அஷ்ரபா நூர்தீன் பாலையூற்று, திருகோணமலை. அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும், அஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம்எழுத்தாளர்களுக்காக ஓர் எழுத்தாளர் விழாவையும் மற்றும், தமிழ் இலக்கியம், கலை தொடர்பான நிகழ்வுகளையும் கடந்த 25 வருடங்களாக நடத்திவருகிறது. அவற்றுடன், கடந்த சில வருடங்களாக, இச் சங்கம், இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும் தமிழ் நூல்களில் சிறந்த நூல்களுக்குப் பணப்பரிசுகளை வழங்கி வருகிறது. எழுத்தாளர்களை ஊக்குவித்துப் பாராட்டுவதையும், புதியவர்களை எழுதத் தூண்டுவதுடன் அவர்களுக்குத் தமிழ் எழுத்துலகில் களம் அமைத்துக்கொடுப்பதையும் நோக்கங்களாகக் கொண்டு இந்தப் பரிசளிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுச் செயற்படுத்தப்படுகிறது. கட்டுரை நூலுக்கான பணப்பரிசு, அவுஸ்திரேலிய தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக அதன் தலைவர், கலாநிதி சந்திரிகா சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்படுகிறது. சிறுகதை நூலுக்காக, முன்னாள் அமைச்சர், மர்ஹூம், ஏ.ஆர்.மன்சூர் அறக்கட்டளையின் சார்பில், திருமதி மரியம் நளிம்டீன் அவர்களால் பணப்பரிசு வழங்கப்படுகிறது. நாவலுக்கான பணப்பரிசு சங்கத்தின் செயலாளர், மருத்துவர், நோயல் நடேசன் அவர்களாலும், கவிதை நூலுக்கான பணப்பரிசு சங்கத்தின் காப்பாளர் திரு கணநாதன் திருமதி கணநாதன் ஆகியோராலும் வழங்கப்படுகிறது. பரிசுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள மேற்குறிப்பிடப்பட்ட எழுத்தாளர்களுக்குரிய பரிசுத் தொகைகளும், சான்றிதழ்களும் காலக்கிரமத்தில் அனுப்பிவைக்கப்படும்.

No comments