இரண்டாவது முறையாகவும் சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்த மட் சிவானந்தா கூடைப்பந்தாட்ட அணி!!
(தனோசன்)
காரைதீவு கூடைப்பந்தாட்டக்கழகத்தின் 13வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அஸ்கோ அமைப்பின் பூரண அனுசரணையுடன் காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகத்தின் ஏற்பாட்டில் அருளானந்தம் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி தொடரானது யோ.டிலக்ஸியன் தலைமையில் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று (15) மாலை 4.30மணியளவில் வெகு சிறப்பாக இடம்பெற்றது
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வு நிலை இலங்கை வங்கி முகாமையாளர் திரு A.மகேந்நிரராஜா அவர்களும் முதன்மை அதிதிகளாக காரைதீவு பிரதேசசபை தவிசாளர் S.பாஸ்கரன் மற்றும் காரைதீவு உதவி பிரதேச செயலாளர் P .பிரணவரூபன் மற்றும் கௌரவ அதிதிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்
இரண்டு வருடங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இச்சுற்றுத்தொடர் இம்முறையும் காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகத்துடன் மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக்கழகம் மோதியிருந்தது இப்போட்டியில் 43 - 37 என்ற ரீதியில் இரண்டாவது முறையாகவும் காரைதீவு கூடைப்பந்தாட்ட அணியை வீழ்த்தி மட் சிவானந்தா கூடைப்பந்தாட்ட அணி சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது
No comments