Column Left

Vettri

Breaking News

சித்திரை புத்தாண்டை வரவேற்கும் கவியரங்கிற்கான கலந்துரையாடல் 




சித்திரை புத்தாண்டை வரவேற்கும் கவியரங்கிற்கான கலந்துரையாடல் ( வி.ரி.சகாதேவராஜா) பராபவ சித்திரை வருட புத்தாண்டை வரவேற்கும் முகமாக கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையம் இலக்கிய ஆர்வலர்களிடையே பலவித நிகழ்ச்சிகளை நடத்த கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டது. குறித்த கலந்துரையாடல் கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் தலைமையகத்தில் வலையமைப்பின் ஆலோசகர் வி.ரி. சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது. முன்னதாக ஒருங்கிணைப்பு மைய பிரதானி எஸ். சாந்தகுமார் வரவேற்புரையுடன் விளக்க உரை நிகழ்த்தினார். தொடர்ந்து எழுத்தாளர்களான அக்கரைப் பாக்கியன், கலாபூஷணம் டேவிட், சஞ்சீவி சிவகுமார், கண.வரதராஜன், வி. பிரபாகரன் மற்றும் எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மைய உறுப்பினர்களும் கருத்துக்களை தெரிவித்தனர். அதன்படி, புத்தாண்டன்று "சிந்திப்போமா சித்திரை மகளே!.." என் மகுடத்தின் கீழ் சிறப்பு கவியரங்கமொன்றை பிரபல கவிஞர் அக்கரைப் பாக்கியன் தலைமையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. பின்னர் மே மாதத்தில் இலக்கிய ஆர்வலர்களுக்கு பயிற்சி பட்டறை ஒன்றை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

No comments