Column Left

Vettri

Breaking News

சிறப்பாக நடைபெற்ற நந்தவன சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்!




இன்று சிறப்பாக நடைபெற்ற நந்தவன சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்! ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கிலங்கை, காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தின் பஞ்ச குண்டபக்ஷ மகா கும்பாபிஷேகம் இன்று 23 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.23 மணி முதல் 11.28 வரையிலான சுபமுகூர்த்த வேளையில் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக பிரதம குரு சிவாகம வித்யா பூஷணம்,சிவாச்சார்ய திலகம், விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஷ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மகா கும்பாபிஷேக கிரியைகளை நடாத்தினார்கள். ஆலய தர்மகர்த்தாக்களான இரா.திருநாவுக்கரசு கே.ஜெகமோகன் மற்றும் மா.சிதம்பரநாதன் எம்.ரவீந்திரன் உள்ளிட்ட பரிபாலன சபையினர் மற்றும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மண்டலாபிஷேக திருவிழாக்கள் நடைபெற்று இறுதியில் சங்காபிஷேகம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

No comments