Column Left

Vettri

Breaking News

உயர்தரப் பரீட்சையில் நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலை மருத்துவத் துறையில் மாவட்டத்தில் இரண்டாம், மூன்றாம் நிலை பெற்றுச் சாதனை




உயர்தரப் பரீட்சையில் நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலை மருத்துவத் துறையில் மாவட்டத்தில் இரண்டாம், மூன்றாம் நிலை பெற்றுச் சாதனை (எம்.எஸ்.எம்.ஸாகிர்) வெளியிடப்பட்ட 2025 (2026) க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி, நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலை உயிரியல் விஞ்ஞானம் மருத்துவத் துறையில் அம்பாறை மாவட்டத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை பெற்றும், பொறியியல் தொழில்நுட்பத் துறையில் மாவட்ட மட்டத்தில் நான்காம் நிலை பெற்றும் தான் கற்ற பாடசாலைக்கும் தனது ஊருக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளனர். அதன்படி இம்முறை உயிரியல் விஞ்ஞானம் மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட ஆர்.ஏ. கைஸான் எனும் மாணவன் 03 ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாமிடத்தையும் எம்.என்.ஏ. அப்துல்லாஹ் என்ற மாணவன் 03 ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் மூன்றாமிடத்தையும் பெற்றதோடு மட்டுமல்லாமல்லாமல், பொறியியல் தொழில்நுட்பத் துறையில் எம்.எஸ்.எம். ஹப்னி என்ற மாணவன் 02 ஏ, பி சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் நான்காம் நிலை பெற்றும் சாதனை நிலை நாட்டியுள்ளனர். இப்பாடசாலையில் இருந்து உயிரியல் விஞ்ஞானம் மருத்துவத்துறையில் 05 பேரும், உயிரியல் விஞ்ஞானம் ஏனைய பிரிவில் 16 பேரும், பௌதீக விஞ்ஞானம் பொறியியல் துறையில் 02 பேரும், பௌதீக விஞ்ஞானம் ஏனைய பிரிவில் 08 பேரும், பொறியியல் தொழில்நுட்பத் துறையில் 02 பேரும், வர்த்தக முகாமைத்துவ துறையில் 08 பேரும், கலைத்துறையில் 08 பேரும் என மொத்தமாக 49 பேர் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இம்மாணவர்களை பாடசாலையின் அதிபர் ஏ.அப்துல் கபூர், கற்பித்த ஆசிரியர்கள், உட்பட்ட அஷ்றக் பாடசாலை சமூகத்தினர் பாராட்டி, தமது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

No comments