நாளை காரைதீவில் சித்திரைக் குதூகலம் ;புத்தாண்டு கலாச்சார விளையாட்டு விழா!!
( வி.ரி.சகாதேவராஜா)
பிறந்திருக்கும் பராபவ சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டும், காரைதீவு விளையாட்டு கழகம் (KSC) தனது 43வது ஆண்டு நிறைவை முன்னிட்டும், அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியமான "ஒஸ்கார்" இணைஅனுசரணையில், மாபெரும் கலாச்சார விளையாட்டு விழாவை நாளை(18) சனிக்கிழமை நடாத்தவுள்ளது.
நாளை சனிக்கிழமை காலையில் மரதன் ஓட்ட நிகழ்வு இடம்பெறவிருக்கிறது.
மாலையில் 2.30 மணிமுதல் கலாச்சார விளையாட்டு விழா, காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
விழாவில் பல்வேறு மரபு வழி கலாச்சார விளையாட்டு நிகழ்ச்சிகள், சிறப்பு கலைநிகழ்ச்சிகள் மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
விசேடமாக, ஒஸ்கார் அனுசரணையில் 9ஏ மற்றும் 3 ஏ பெற்ற கல்விச் சாதனையாளர்களை மைதானத்தில் பகிரங்கமாக பாராட்டிக் கௌரவிக்கின்ற நிகழ்வும்நடைபெறவுள்ளது.
நிகழ்வை சிறப்பிக்க பிரதம, சிறப்பு ,கௌரவ, நட்சத்திர அதிதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
காரைதீவின் விளையாட்டு மற்றும் சமூக ஒற்றுமையை, கலாச்சாரத்தை, தனித்துவத்தை ,அடையாளத்தை மேம்படுத்த இவ்விழா வருடாந்தம் வெகு சிறப்பாக நடாத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
No comments