Column Left

Vettri

Breaking News

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) 20ஆவது நிரந்தர புதிய அதிபராக எம். நெளஷாத் ஆதம்பாவா கடமையேற்பு.




கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) 20ஆவது நிரந்தர புதிய அதிபராக எம். நெளஷாத் ஆதம்பாவா கடமையேற்பு. பாறுக் ஷிஹான் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) 20ஆவது அதிபராக இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் - 1 சேர்ந்த ஏ.எம். நெளஷாத் கடந்த திங்கட்கிழமை (27) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) இருபதாவது புதிய அதிபராக இலங்கை கல்வி நிருவாக சேவை தரம்-I அதிகாரி ஏ.எம். நெளஷாத் இலங்கை கல்வி அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டு வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். கல்முனை சாஹிரா கல்லூரியில் இரண்டாம் நிலை கற்று, பின்னர் மத்திய முகாம் அஸ்-சிராஜ் வித்தியாலயத்தில் கலை பிரிவில் (3A) சித்தி பெற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்னுட்ப முகாமைத்துவம் (MIT) இளமானி பட்டம் பெற்று கல்வி மற்றும் கல்வி முகாமைத்துவ பட்டப்பின் டிப்ளோமா (PGDEM, PGDE), கல்வி முதுமானி பட்டத்தையும் ( M.Ed) பெற்றுள்ளார். இலங்கை கல்வி நிருவாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து கல்வி நிருவாக சேவை இணைந்து கொண்டார். தனது சேவைக்காலத்தில் சில ஆண்டுகள் சம்மாந்துறை கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர், மாவனெல்லை சாஹிரா கல்லூரி அதிபர், கல்முனை சாஹிரா கல்லூரியின் பிரதி அதிபராக குறுகிய காலம் பணியாற்றினார். பின்னர் கிண்ணியா கல்வி வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளராகவும் கடமையாற்றிய நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கல்வி அதிகாரி ஏ.எம். நெளஷாத் ஒரு சிறந்த அனுபவம் வாய்ந்த இளம் கல்வி அதிகாரி, உளவள வளவாளரும் ஆவார். தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் அதிபர் ஏ.எம். நெளஷாத் அதிதிகளுக்கு முன் உரையாற்றும் போது தனது கருத்துக்களை இவ்வாறு தெரிவித்தார்: இலங்கையில் பல நீண்ட கால வரலாற்றைக்கொண்ட முஸ்லிம் பெண் பாடசாலையான மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இன்று அதிபராக பொறுப்பேற்றுள்ள நான், அமானிதமாக கொண்டு எனது கடமைகளை மிகச் சிறப்பாக செய்து எமது பிரதேசத்தில் மிகச் சிறப்பான ஒரு பாடசாலையாக வளர்ச்சி காண உழைப்பேன் என்றும் அத்துடன் மாணவிகளின் கல்வி வளர்ச்சியுடன் இணைந்த பண்பாடு, கலாசாரம் மீக்க பெண் மாணவிகள் சமூகத்தை உருவாக்குவதில் அயராது பாடுபடுவதுடன் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த கல்வி அதிகாரிகள் கல்லூரி சமூகத்திற்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, எமது பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்கம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த பாடசாலையின் வளர்ச்சிக்கு கைகோர்க்க முன் வருமாறு வேண்டுகோளை விடுத்தார். புதிய அதிபர் வரவேற்கும் நிகழ்வானது கல்லூரி முன்றலில் பூ மாலை அணிவிக்கப்பட்டு கல்லூரி, தேசிய கோடிகள் இயற்றப்பட்டு அழைத்து வரப்பட்டதுடன் பதவி ஏற்பு வைபவத்தில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, மூதூர்,கிண்ணியா வலயக் கல்வி பணிமனையில் பிரதிக்கல்வி பணிப்பாளர், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், கோட்டக் கல்வி பணிப்பாளர்கள், வலயக் கல்வி அலுவலக உயர் அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர், உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்கத்தின் செயலாளர், சங்க உறுப்பினர்கள், கல்முனை ஸாஹிரா கல்லூரி அதிபர், ஏனைய பாடசாலை அதிபர்கள், கல்லூரியின் பிரதி, உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவிகள் பெற்றோர்கள், புதிய அதிபரின் பெற்றோர்கள், மனைவியின் தந்தை, சகோதரர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மஹ்மூத் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் றிசாத் ஷெரீப் அவர்களினால் பதவி பெயர் பலகை அன்பளிப்பு செய்யப்பட்டதுடன் நிகழ்வின் விஷேட துஆ பிராத்தனை பின்னர் ஸ்மாட் மண்டபத்தில் பொதுக் ௯ட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஏலவே கல்லூரியின் அதிபராக சேவையாற்றிய இவர், கல்வி நிர்வாகத்தில் விரிவான அனுபவத்துடன் தற்போது கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் நிரந்தர அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இவரது நியமனம், கல்லூரியின் கல்வி தரத்தை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1971. ஜனவரி, 05ஆம் திகதியிலிருந்து மஹ்மூத் மகளிர் கல்லூரி என பெயர் மாற்றம் பெற்றதிலிருந்து இன்று (2026) 55 வருட கால கல்வி செயற்பாட்டில் இலங்கை திருநாட்டின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் நிருவாகத்தின் கீழ் இயங்கும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியானது முஸ்லிம் பெண்கள் கல்வி வளர்ச்சியில் தனக்கு என்று தனித்துவமான அடையாளத்தை கொண்டுள்ளன.

No comments