Column Left

Vettri

Breaking News

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் போதைப்பொருள் செயற்திட்டம் முன்னெடுப்பு முயற்சி!!




பாறுக் ஷிஹான் 

அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல் பொலிஸ் மா அதிபரின்  மேற்பார்வையில் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கெதிரான செயற்றிட்டம்  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கமைய வெள்ளிக்கிழமை(6)   அம்பாறை பிரதான பேருந்து நிலையத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற போதைப்பொருள்  விழிப்புணர்வு நிகழ்வில்   அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல  அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி  பங்கு பெற்றலுடன் சிறப்பாக நடைபெற்றது.

 இதன்போது 'விற்கின்ற-அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்'- அகன்று செல்' எனும் வாசகத்தினை மையமாகக்கொண்டு துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு போதைப்பொருள் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன் வாகனங்களில் 'போதை ஒழிப்பு' ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

அத்துடன் அரச அலுவலகங்கள்  மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

No comments

Subscribe Us