Column Left

Vettri

Breaking News

தபால் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!




 தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தைத் ஒத்த போலி இணையத்தளமொன்றை பயன்படுத்தி இடம்பெறும் மோசடி தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பார்சல் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கென பணம் செலுத்த வேண்டுமெனவும் அதனை ஒன்லைன் ஊடாக செலுத்துமாறும் SMS செய்தியொன்று வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுவதாக தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த மோசடி செயல் ஊடாக வாடிக்கையாளர்கள் Payment Gateway ஊடாக தமது வங்கி அட்டை விபரங்களை உள்ளீடு செய்யும் சந்தர்ப்பத்தில் அவர்களின் வங்கி கணக்குகளில் உள்ள பணம் மோசடியான முறையில் கையகப்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.

இதனால் தபால் திணைக்களத்தின் பெயரில் பணம் கேட்டு வரும் குறுச்செய்திகள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென தபால் மா அதிபர் ஆர்.பீ.சத்குமார தெரிவித்துள்ளார்.

No comments