Column Left

Vettri

Breaking News

ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் முடக்கம்!




 ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தின் அனைத்து பொதுச் சேவைகளும் தொடர்ந்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

நேற்று (26) பிற்பகல் 1.30 மணியளவில் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இன்று (27) முதல் மறு அறிவித்தல் வரும் வரை அனைத்து ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவைகள் உள்ளடங்கலாக அனைத்து பொதுச் சேவைகளும் இயங்காது.

எனவே, கொழும்பிலுள்ள தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிராந்திய அலுவலகங்களுக்கும் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கணினி கட்டமைப்பு முழுமையாக சீர் செய்யப்பட்ட பின்னரே சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

No comments