Column Left

Vettri

Breaking News

இன்று மடத்தடியில் சிறப்பாக நடைபெற்ற மகா சங்காபிஷேகம்




இன்று மடத்தடியில் சிறப்பாக நடைபெற்ற மகா சங்காபிஷேகம் ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தில் நவோத்ர சகஸ்ர சத மகா சங்காபிஷேகம் இன்று (24) செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஷ்வர குருக்கள் வழிகாட்டலில் 108 சங்குகளுடன் இன்று காலை சங்காபிஷேக கிரியைகள் ஆலய குரு சிவஸ்ரீ சபா கோவர்த்தன குருக்கள் தலைமையில் சிவஸ்ரீ சபாரெத்தினக் குருக்கள் சிவஸ்ரீ மகேஸ்வரக் குருக்கள் துணையுடன் ஆரம்பமாகி, பகல் 12 மணியளவில் சங்காபிஷேகம் நடைபெற்றது. சங்காபிஷேகத்தில் கலந்து கொண்ட அடியார்களுக்கு மீனாட்சி அம்மனின் திருவுருவப்படம் பொறித்த வர்ணப் படங்கள் வழங்கப்பட்டன. காரைதீவு இசைக்கலைஞர் விபுலமணி இ.கோபாலசிங்கத்தின் 33 அம்பிகை பாடல்கள் அடங்கிய "தெய்வீக கானங்கள்" இறுவெட்டு வெளியீடும் இடம்பெற்றது. ஆலய அறங்காவலர்சபைத்தலைவர் கி.ஜெயசிறில் தலைமையிலான அறங்காவலர் சபையினர் ,ஆலோசகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக அன்னதானமும் நடைபெற்றது.

No comments