Column Left

Vettri

Breaking News

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் சத்தியப்பிரமாண நிகழ்வுகள்




ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் சத்தியப்பிரமாண நிகழ்வுகள் ஆலையடிவேம்பு நிருபர் வி.சுகிர்தகுமார் அரச அலுவலகங்களிலும் 2026 ஆம் ஆண்டு கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வுகள் இன்று காலை 9.00 மணிக்கு இடம்பெற்றன. அம்;பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ்; தலைமையில்; சத்தியப்பிரமாண நிகழ்வுகள்; கடமைகளை ஆரம்பித்தல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. பிரதேச செயலகத்தில் தேசிய கொடியினை பிரதேச செயலாளர் ஏற்றி வைத்துடன்; தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து ஒரு நிமிட இறைவணக்கம் இடம்பெற்றதன் பின்னர் நாட்டிற்காக உயிர்நீத்த படைவீரர்கள் உள்ளிட்ட அனைவரின் நினைவாக இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் பின்னராக சத்தியபிரமாண உறுதிமொழியை உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி அவர்கள் வாசிக்க உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணத்தை எடுத்துக்கொண்டனர். நிறைவாக பிரதேச செயலாளரினால் விசேட உரையும் வழங்கப்பட்டது. அவரது உரையில் நாட்டில் தற்போதைய ஆட்சிக்காலத்தில் அரச சேவைகள் மிகவும் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் சேவையினையே முதன்மையாக கருதப்படுகின்றது. ஆகவே மக்களுக்கான சேவைகள் சிறப்பாக வழங்க வேண்டும். இதனை நிறைவேற்றும் பொருட்டு அனைத்து உத்தியோகத்தர்களும் அர்ப்பணிப்போடு செயற்படவேண்டும் என்றார். அந்த வகையில் நமது சகல வளமுள்ள பிரதேசத்தில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இருக்கும் நிலத்தை அதிகரிக்க முடியாது. ஆனால் உற்பத்தியை அதிகரிக்க முடியும். ஆகவே வீட்டுக்கு வீடு வீட்டுத்தோட்டங்களை உருவாக்கி உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றார்.

No comments