Column Left

Vettri

Breaking News

கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டில் – மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு!




கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டில் – மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் 2026ஆம் ஆண்டுக்கான முதல் சமூக சேவைத் திட்டமாக, பாடசாலை மாணவர்களின் கல்வி தேவைகளை கருத்தில் கொண்டு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (03) கல்முனை 12ஆம் வட்டாரத்தில் சிறப்பாக நடைபெற்றது. கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டில், சமூக செயற்பாட்டாளர் றிஷாட் அவர்களின் தலைமையில் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில், கல்முனை முன்னாள் மாநகரசபை பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். நிகழ்வின் போது அவர் மாணவர்களை நோக்கி ஊக்கமளிக்கும் உரையாற்றியதுடன், கல்வி என்பது ஒரு சமூகத்தின் நிலைத்த முன்னேற்றத்திற்கு அடிப்படை என வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, தனது பொற்கரங்களால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார். மாணவர்களின் கல்வி பயணத்திற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவது ரஹ்மத் பவுண்டேசனின் முதன்மை நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் உயர்பீட உறுப்பினர்கள், சமூக முக்கியஸ்தர்கள், பெருந்திரளான பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். அனைவரின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் இந்நிகழ்வை வெற்றிகரமாக மாற்றியமைத்தது குறிப்பிடத்தக்கது.

No comments