Column Left

Vettri

Breaking News

அம்பாறை மாவட்டத்தில் போக்குவரத்து அபராதங்களை நிகழ்நிலை (online) செலுத்தும் முறை ஆரம்பம்!!




பாறுக் ஷிஹான்

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் செலுத்துவதை இலகுவாக மேற்கொள்வதற்கு  இலங்கை பொலிஸ் ஆரம்பித்துள்ள  அரசாங்க ஊதியத் திட்டம் (GOV PAY) குறித்து அம்பாறை மாவட்ட பொலிஸ்  அதிகாரிகள், போக்குவரத்து  காவல்துறை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று அம்பாறை தலைமையக காவல்துறை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இலங்கை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி  டபிள்யூ.பி.ஜே. சேனாதிராஜா  மற்றும் அம்பாறை  மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார தலைமையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள 22 பொலிஸ்  நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இங்கு அரசாங்க ஊதியத் திட்டத்துடன் இணைந்து வழங்கப்பட்ட தொலைபேசிகள் காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் - 1 சம்பத் விக்ரமரத்ன இலங்கை தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதிநிதி திருமதி உத்தாரி விதானா  மற்றும் லங்கா பே பிரதிநிதி செயற்பாட்டு முகாமையாளர்  அமிலா விக்ரமநாயக்க ஆகியோர்   கலந்து கொண்டனர்.

No comments