பதுளை கைலகொட மக்களுக்கு இணைந்த கரங்கள் பேருதவி
பதுளை கைலகொட மக்களுக்கு இணைந்த கரங்கள் பேருதவி
( வி.ரி.சகாதேவராஜா)
இணைந்த கரங்கள் அமைப்பு பதுளை 78G கைலகொட கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் 18 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை நேற்று முன்தினம் வழங்கி வைத்தன.
இரண்டு பெரிய அங்கர் பக்கட்டுகள் அடங்கலாக தலா பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இப்பகுதி பதுளை ஓயாவுக்கு மிக அருகில் ஏறத்தாழ 100 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பிரதேசமாகும்.
இவ்வீடுகளில் வசிக்கும் முதியோர்கள் தங்கள் வயதிற்கு இப்படி ஒரு வெள்ளம் தங்கள் வீடுகளுக்கு வரவில்லை என்றே கூறுகிறார்கள்.
கிட்டத்தட்ட எல்லாமே நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ள அவலம்.
சில முதியோர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று விகாரையில் தங்க வைக்க வேண்டியேற்பட்டது.பின்பு தேவாலயத்தில் மாற்றப்பட்டு அங்கு அக் குடும்பங்கள் இருக்கின்றனர்.
கண்மூடித் திறப்பதற்குள் தங்கள் வாழ்நாளில் உழைத்த அனைத்தும் தண்ணீரோடு போய்விட்ட நிலை.
இந்த நிர்க்கதியான நேரத்தில் எமது கோரிக்கையை தம் சிரமேற்கொண்டு நிதியுதவி அளித்த அவுஸ்திரேலியா இணைந்த கரங்கள் அமைப்பிற்கு நன்றியுடன் நினைவு கூர்வதாக அம்மக்கள் தெரிவித்தனர்.
No comments