ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாக கூறி நிதி மோசடி!!
ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட பல்வேறு நபர்கள் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான முறைப்பாடுகள் தற்போது அதிகரித்துள்ளன.
ஒன்லைனில் பொருட்களை ஓடர் செய்வதற்கு முன், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அமைப்பு பற்றி துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்களைப் பெற வேண்டும் குழுவின் தலைவர் தகவல் பாதுகாப்பு பொறியாளர் நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.
எனவே, பண்டிகைக் காலத்தில் ஒன்லைனில் பொருட்களை வாங்கும் போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாக மோசடிகள் நடப்பது குறித்தும் கடந்த சில நாட்களாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் ஆனந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments