Column Left

Vettri

Breaking News

சம்மாந்துறையில் வரலாறு படைத்த வண்ணச்சிறகு சித்திரக் கண்காட்சி 




சம்மாந்துறையில் வரலாறு படைத்த வண்ணச்சிறகு சித்திரக் கண்காட்சி ( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயத்தின் "வண்ணச் சிறகு" வரலாறு கூறும் சாதனை மிகு சித்திரக் கண்காட்சி கடந்த நான்கு தினங்களாக சம்மாந்துறை ஆசிரியர் வள நிலையத்தில் நடைபெற்று வருகிறது. சம்மாந்துறை வலய சித்திர பாட ஆசிரிய ஆலோசகர் எஸ் எல்.அப்துல் முனாப் தலைமையில் நடைபெற்ற இந்த கண்காட்சியை கடந்த திங்கட்கிழமை (22) சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் வைபவ ரீதியாக திறந்து வைத்தார் . கிழக்கு மாகாண அழகியல் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன் கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்தார். வலயத்தின் திறமை மிகு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களது கைவண்ணத்திலான சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மாணவர்கள் சிலரின் மகத்தான ஆக்கங்களும் பலராலும் பாராட்டப்பட்டன. ஓய்வுபெற்ற சித்திர பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் ஜ.எல்.றசூல் மற்றும் ஆசிரிய ஆலோசகர் திருமதி சேகும்மா ஆதம்லெவ்வை ஆகியோர் பொன்னாடை போர்த்தி பாராட்டப்பட்டனர். வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் முனாப் அவர்களின் அயராத முயற்சியின் வெற்றி இது என பலரும் பாராட்டினர். அத்தோடு அவருக்கு பொன்னாடை போர்த்தி விசேட விருதும் வழங்கப்பட்டது. பிரதிக உதவிகல்விப் பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் பார்வையிட்டு வருகின்றனர். வெள்ளிக்கிழமை நிறைவுபெறும்.

No comments