Column Left

Vettri

Breaking News

சாதனை படைத்த முதியோர்கள் மற்றும் முதியோர் சங்கங்களுக்கான நினைவுச்சின்னம் வழங்கல்




சாதனை படைத்த முதியோர்கள் மற்றும் முதியோர் சங்கங்களுக்கான நினைவுச்சின்னம் வழங்கல் ஆலையடிவேம்பு நிருபர் வி.சுகிர்தகுமார் கிழக்கு மாகாண சமூக சேவைத்திணைக்களத்தின் இரண்டு மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் ஆலையடிவேம்பு சமூக சேவை நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட சுற்றுமதில் திறப்பு விழா சாதனை படைத்த முதியோர்கள் மற்றும் முதியோர் சங்கங்களுக்கான நினைவுச்சின்னம் வழங்கல் Pளுனுபு திட்டத்தின் கீழ் விசேட தேவையுடையவர்களின் வீடுகளுக்கான மின்னினைப்பு காசோலை வழங்கல் முதியோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு போன்ற பல்வேறு நிகழ்வுகள் இன்று (22)இடம்பெற்றன. பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் ரி.ஜெயவாணி தலைமையில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் இ.சந்திரகுமார் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர். நிகழ்வில் சுற்றுமதில் திறப்பு விழா இடம்பெற்றதுடன் பிரதேச செயலாளர் மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்தார். தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகளின் போது சாதனை படைத்த முதியோர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் முதியோர் சங்கங்களுக்கான நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது. பின்னர் விசேட தேவையுடையவர்களின் வீடுகளுக்கான மின்னினைப்பு காசோலை வழங்கப்பட்டது. நிறைவாக வளவாளராக கலந்து கொண்ட எம்.எப்.பர்சானா மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பறுசா நக்பர் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் சிவகுமார் ஆகியோர் முதியோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கினை நடாத்தி வைத்தனர்.

No comments