Column Left

Vettri

Breaking News

கல்முனை பிரதேச இளைஞர் எழுச்சி முகாம் - 2025




கல்முனை பிரதேச இளைஞர் எழுச்சி முகாம் - 2025 ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ,தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் 2025 ஆம் ஆண்டுக்கான YOUTH IGNITE CAMP கல்முனை பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி எ.எல் .எம் அஸீம் அவர்களின் தலைமையில் கல்முனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இன்று (27) இடம் பெற்றது. மனோநிலை | திறன்கள் | ஆளுமை | தலைமைத்துவம் | தேசத்தை கட்டியெழுப்பல்" |விளையாட்டு (Mindset | Skills | Character | Leadership | Nation Building) ஆகிய தலைப்புகளை உள்ளடக்கி, படைப்புதிறன்களை வளர்த்து கொள்ளல் என்ற தொணிப்பொருளில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக அம்பாரை மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.டபிள்யூ.எஸ். கங்கா சாகரிக்கா, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உதவி பணிப்பாளர் ஏ.முபாரக் அலி, கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் பலீல் , அபிவிருத்தி உத்தியோகத்தர் றாசிக் நபாயிஸ் மற்றும் இளைஞர்கள் யுவதிகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பங்குபற்றிய இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

No comments