அம்பாறை மாவட்டத்தில் அடை மழை பலத்த காற்று கடல் கொந்தளிப்பு குடைசாயும் மரங்கள்

அம்பாறை மாவட்டத்தில் தொடர் அடை மழை காரணமாக மீண்டும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் பொதுப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு இடங்களில் அடை மழை காரணமாக மரங்கள் உடைந்துள்ளதுடன் பலத்த காற்று காரணமாக சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அட்டாளைச்சேனை, தைக்கா நகர் , அக்கரைப்பற்று, நிந்தவூர்,காரைதீவு,மாவடிப்பள் ளி சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை , நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை மல்வத்தை போன்ற பிரதேசங்களும் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள சில வீட்டுத்திட்டங்களும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்துள்ளார்.
மேலும்மேற்குறித்த பகுதியில் பெய்த கனமழை மற்றும் கடும் காற்று அழுத்தத்தால் போக்குவரத்து மின்சாரம் தடைப்பட்டு பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டது.
இது தவிர சவளக்கடை கிட்டங்கி வீதி காரைதீவு மாவடிப்பள்ளி வீதிகள் மீண்டும் வெள்ள நீர் பரவ ஆரம்பித்துள்ளது.தொடர்ச்சியாக அக்கரைப்பற்று அம்பாறை வீதியில் போக்குவரத்து பாதிப்ஏற்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் வீதிகள் பலவும் நீரில் மூழ்கி வருகின்றன.மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது. இதனால் தாழ்நிலப் பிரதேசங்கள், வீடுகள், வீதிகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கக் கூடிய அபாயமும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல்வேறு இடங்களில் அடை மழை காரணமாக மரங்கள் உடைந்துள்ளதுடன் பலத்த காற்று காரணமாக சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அட்டாளைச்சேனை, தைக்கா நகர் , அக்கரைப்பற்று, நிந்தவூர்,காரைதீவு,மாவடிப்பள்

No comments