Column Left

Vettri

Breaking News

இன்று விபுலானந்தாவில் சர்வதேச ஆசிரியர் தின விழா!!




( காரைதீவு சகா)

காரைதீவு விபுலானந்தா மொன்டி சோரி முன்பள்ளிப் பாடசாலையின் வருடாந்த சர்வதேச ஆசிரியர் தின விழா இன்று  (8)  புதன்கிழமை  சிறப்பாக நடைபெற்றது.

பெற்றோர்கள் சார்பில் ஆ.பிரதீபா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக பாடசாலைப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.

 கௌரவ அதிதிகளாக மொன்டிசோரி ஆசிரியர்களான ஜெயநிலந்தினி மற்றும் ரம்யா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

முன்னதாக மாணவர்கள் வெற்றிலை கொடுத்து வரவேற்று ஆசி பெற்றனர் . 
விசேட உரையை பெற்றோர் சார்பில் மூத்த ஓய்வு நிலை ஆசிரியை திருமதி கௌரி தர்மராஜா நிகழ்த்தினார்.
பெற்றார் திருமதி எஸ்.அகல்யா நன்றியுரையாற்றினார்.

No comments

Subscribe Us