உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடுகள்!!
பாறுக் ஷிஹான்
உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு, "சொந்தமாக இருக்க இடம் - ஒரு அழகான வாழ்க்கை" என்ற தொனிப்பொருளின் கீழ் திங்கட்கிழமை (6)தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளினை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா நிந்தவூர்,அட்டாளைச்சேனை,பாலமு னை, அக்கரைப்பற்று,காரைதீவு, நாவிதன்வெளி மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களில் இன்று வழங்கிவைக்கப்பட்டது .
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்திற்குட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு "உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பயனாளிகள் புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்ச்சி திட்டம் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களினால் கடந்த காலங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஐரங்கனி, பிரதேச செயலாளர்கள்,தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பொறியிலாளர்கள் மற்றும் அதிகாரிகள்,பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர், பொதுமக்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments