Column Left

Vettri

Breaking News

காரைதீவு பிரதேச செயலக வலைப்பந்தாட்ட இளைஞர் அணி தேசிய போட்டிக்கு தெரிவு...!!!




 ( வி.ரி.சகாதேவராஜா)

 அம்பாறை மாவட்ட மட்ட இளைஞர் கழக வலைப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி  அம்பாறை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.  

இறுதிப் போட்டியில் காரைதீவு அணியும் அட்டாளைச்சேனை அணியும் மோதின.

அதில் 4:1 என்ற கோல் வித்தியாசத்தில் காரைதீவு அணி வெற்றி பெற்றது.


காரைதீவு பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய இராமகிஷ்ணா இளைஞர் கழக அணி வலைப்பந்தாட்ட போட்டியில்  2025 ம் ஆண்டின் மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு  தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

No comments

Subscribe Us