Column Left

Vettri

Breaking News

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனையில் கடற்கரைப் பூங்கா !









( வி.ரி. சகாதேவராஜா)

ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின்கீழ் கடற்கரை கரையோர பிரதேசங்களில் பூங்காக்கள் அமைக்கும் வேலை திட்டத்தின், முதலாவது வேலைத்திட்டமாக கல்முனை - 02ல்  கரையோரப் பகுதியில் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா கலந்து சிறப்பித்தார்.

 கரையோர பாதுகாப்பு துணைக்களத்தின் அதிகாரி எஸ்.துளசி நாதன் , கல்முனை வடக்கு பிரதேச செயலாளர். ரி.ஜே. அதிசயராஜ் . மற்றும் பல உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும்  கலந்து கொண்டனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தினால் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ்  14 லட்சம் பெறுமதியான 100 பூங்காக்கள் அமைக்கப்
பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Subscribe Us