Column Left

Vettri

Breaking News

நாமல் ராஜபக்ஷ ஐஸ்லாந்து நாட்டில் ஜனாதிபதியாக போகிறார்-அமைச்சர் விமல் ரத்நாயக்க




 நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி ஆவதற்கான  பேச்சுவார்த்தை  இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதை  நான் பார்த்தேன்.

அவர் எங்கே போய் ஜனாதிபதியாக போகிறார் என்பதை நான் பார்த்தேன். ஐஸ்லாந்து நாட்டில்  தான் அவர் ஜனாதிபதியாக போகிறார் என்பதை அறிந்தேன்.

இதற்காகநீங்கள் எவராவது மொட்டுக் கட்சிக்கோ அல்லது மஹிந்த ராஜபக்ஷவிக்கு அதிகாரத்தை கொடுப்பீர்களா?(இல்லவே இல்லை -பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்)அதாவது கொடுப்பதற்கு  எங்களில் யாருக்காவது  பைத்தியமா?  ஆகையினால்  மக்கள் வைத்திருக்கின்ற அடியை  பின் வைக்க மாட்டார்கள் என்று கூறுகின்றேன்
இதுதான் இருக்கின்ற அரசாங்கம்.


இந்து அரசாங்கம் தான் முன்னே செல்லப் போகின்றது.இந்து அரசாங்கத்தை தோற்கடிப்பதாயின் என்ன செய்ய வேண்டும்
அரசாங்கத்தை ஆழ்வதற்கான  இதைவிட ஒரு நல்ல கட்சி வரவேண்டும்ஆகையினால் அன்பான தாய் தந்தையர்கள் அன்பான சகோதரிகளே நீங்கள் எந்த ஒரு விடயத்திலும் பின்வாங்க வேண்டாம்  என  போக்குவரத்து  நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான அமைச்சர்   விமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அம்பாறை - கல்முனை  காரைதீவு இணைக்கும் மாவடிப்பள்ளி பெரிய பாலம் புனர்நிர்மாண அங்குரார்பண நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்த கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி ஆவதற்கான  பேச்சுவார்த்தை  இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதை  நான் பார்த்தேன்.
அவர் எங்கே போய் ஜனாதிபதியாக போகிறார் என்பதை நான் பார்த்தேன். ஐஸ்லாந்து நாட்டில்  தான் அவர் ஜனாதிபதியாக போகிறார் என்பதை அறிந்தேன்.இதற்காக நீங்கள் எவராவது மொட்டுக் கட்சிக்கோ அல்லது மஹிந்த ராஜபக்ஷவிக்கு அதிகாரத்தை கொடுப்பீர்களா?(இல்லவே இல்லை -பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்)
அதாவது கொடுப்பதற்கு  எங்களில் யாருக்காவது  பைத்தியமா?  ஆகையினால்  மக்கள் வைத்திருக்கின்ற அடியை  பின் வைக்க மாட்டார்கள் என்று கூறுகின்றேன்
இதுதான் இருக்கின்ற அரசாங்கம்.


இந்து அரசாங்கம் தான் முன்னே செல்லப் போகின்றது.இந்து அரசாங்கத்தை தோற்கடிப்பதாயின் என்ன செய்ய வேண்டும்
அரசாங்கத்தை ஆழ்வதற்கான  இதைவிட ஒரு நல்ல கட்சி வரவேண்டும்ஆகையினால் அன்பான தாய் தந்தையர்கள் அன்பான சகோதரிகளே நீங்கள் எந்த ஒரு விடயத்திலும் பின்வாங்க வேண்டாம்.நாங்கள்  இந்த அரசாங்கத்தினை உருவாக்கி  ஒரு வருடம் கூட  நிறைவடையவில்லை.நாங்கள் இந்த பாலத்துக்கு ஒரு வருடம் என்று அடிக்கல் நாட்டினாலும் உண்மையில் நாங்கள் பார்த்தால்  அனுர சகோதரர் அவர்கள் ஜனாதிபதியாகிய போது  எங்களிடம்   மூன்று பேர் தான் அமைச்சரவையில் இருந்தார்கள்.

 நவம்பர் மாதம்  14ஆம் திகதி தேர்தலின்  பிற்பாடு தான் நாங்கள் ஒரு அரசாங்கத்தினை  அமைத்தோம்.
அதன் பின்னர் ரணில் விக்ரமசிங்கவின் வரவு செலவு திட்டத்தில் தான் 4 மதல் 4 மாதங்கள் அரசாங்கத்தினை கொண்டு நடத்தினோம்.

2025 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி வரவு செலவு திட்டத்தில் தான்   இந்த பாலத்திற்கான நிதி  ஒதுக்கப்பட்டது.
மார்ச் மாதத்திலிருந்து  அதிலிருந்து இன்று வரை பார்த்தால் மாதம் 6 மாதங்கள் தான் நிறைவடைந்துள்ளது.பின்னர்   மார்ச் மாதம் அளவில் பிரதேச சபை தேர்தல்கள் நடைபெற்ற ன.இத்தேர்தல் சட்டங்களின் பிரகாரம் எங்களுக்கு அந்த காலகட்டத்தில் வேலை செய்ய முடியாது. மே 6ஆம் தேதி வரை தேர்தல் முடிவுரை என்பதை காத்திருக்க வேண்டி ஏற்பட்டது.

ஆகையினால் தான் இந்த இடத்தில் பொறியியலாளர் அனைவருக்கும் நன்றி கூட கடமைப்பட்டிருக்கின்றேன். அவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்ததன்  காரணமாகத்தான் நாங்கள் இன்று இந்த பாலத்தினை அங்குரார்ப்பணம்  செய்திருக்கின்றோம் என்றார்.



செய்திப் பின்னணி

அம்பாறை - கல்முனை  காரைதீவு இணைக்கும் மாவடிப்பள்ளி பெரிய பாலம் புனர்நிர்மாண அங்குரார்பண நிகழ்வு

அம்பாறை - கல்முனை  காரைதீவு இணைக்கும் மாவடிப்பள்ளி பெரிய பாலம் புனர்நிர்மாண அங்குரார்பண நிகழ்வு  சனிக்கிழமை (20) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் போக்குவரத்து  நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான அமைச்சர்   விமல் ரத்நாயக்க பிரதம அதிதியாகவும்  கெளரவ அதிதியாக கிராமிய அபிவிருத்தி   சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் தோழர் வசந்தபியதிஸ்ஸவும் விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான  முத்து ரத்துவத்தைஇமஞ்சுல  ஆகியோர்  கலந்து கொண்டனர்.

இப்பாலமானது சுமார் 90 வருடம் பழமை வாய்ந்த பாலம் என்பதுடன்  மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு அமைய இப்பாலமானது புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்  அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் அம்பாரை மாவட்ட கரையேர பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவின்    வேண்டுகோளுக்கமைய இப்பாலம் சுமார் 247 மில்லியன் நிதி உதவி ஊடாக  புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளது.

மேலும் அம்பாறை மாவட்ட  செயலாளர் சிந்தக அபேவிக்ரம, வீதி அபிவிருத்தி அதிகார சபையின்  கிழக்கு மாகாண பணிப்பாளர் பொறியியலாளர் எம்.பி. அலியார், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமை பொறியியலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்,தேசிய மக்கள் சபையின் பிரதேச சபை உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச ஒருங்கிணைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments